லண்டனில் இருந்து நேபாளத்திற்கு மும்பை வழியாகப் பயணம் செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த வான்சிபா என்ற பெண், மும்பை விமான நிலையத்தில் தனக்குக் கிடைத்த சிறப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் இந்தியாவில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்று ஆரம்பத்தில் பதற்றத்துடன் இருந்த அவர், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய பிறகு நிலைமை அப்படியே மாறியதாகக் கூறியுள்ளார்.
10 மணிநேரக் காத்திருப்பின் போது, இந்திய விமான நிலைய ஊழியர்கள் காட்டிய அன்பும், உபசரிப்பும் தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
சர்வதேச முனையத்திலேயே இருந்ததால் இமிகிரேஷன் சோதனைகள் எதுவும் இன்றி பாதுகாப்புச் சோதனைகள் மிக எளிதாக முடிந்ததாகவும், அங்குள்ள ஓய்வறையில் வயிறு நிறைய உணவருந்தி நன்றாக ஓய்வெடுத்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இடையில் அவரது பையில் இருந்த ‘பவர் பேங்க்’ தொடர்பாக வந்த அழைப்பைக் கூட ஊழியர்கள் மிகக் கனிவாகக் கையாண்டதாக அவர் பாராட்டியுள்ளார். “என்னால் மும்பையைப் பார்க்க முடிந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.
இந்திய ஊழியர்கள் அனைவரும் மிகச் சிறந்தவர்கள்” என அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியர்களின் விருந்தோம்பலை ஒரு பாகிஸ்தான் பெண் மனதாரப் பாராட்டியிருப்பது இரு நாட்டு நெட்டிசன்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
