சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் பிரஃபுல் ஹிங்கே, தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே உலக சாதனை படைத்து மிரட்டியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தான் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 19 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில், அறிமுக ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை 24 வயதான இந்த விதர்பா வீரர் பெற்றுள்ளார்.

​விதர்பா மாநிலத்துக்காக ரஞ்சி கோப்பை வென்று கொடுத்த பிரஃபுல் ஹிங்கே, வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல் போன்ற நட்சத்திர வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்து மைதானத்தையே அதிர வைத்தார். சென்னை எம்.ஆர்.எஃப் (MRF) வேகப்பந்து வீச்சு மையத்தில் பயிற்சி பெற்ற இவர், தற்போது ஐபிஎல் 2026 தொடரின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார்.