கடையில் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்த ஒரு முதியவரின் பாக்கெட்டில் இருந்து, மிக லாவகமாக மொபைல் போனைத் திருடிச் சென்ற சிறுவர்களின் செயல் இணையத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவருக்குத் தெரியாமல் அவரது பின்னால் பதுங்கி வரும் இரண்டு சிறுவர்கள், ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் போனை உருவிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் செல்கின்றனர். இந்தச் சிறு வயதிலேயே இவ்வளவு நேர்த்தியாகத் திருடுவதைப் பார்த்த நெட்டிசன்கள், “காலம் கெட்டுப் போச்சு” என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

​பொது இடங்களில் பொருட்கள் வாங்கும்போது மக்கள் எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்திச் சிறுவர்கள் செய்யும் இந்த கைவரிசை இப்போது சிசிடிவி (CCTV) காட்சிகளாக வெளியாகி வைரலாகி வருகிறது. “இந்த வயசுல படிக்கப் போகாம இப்படி ஒரு வேலையா?” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பகிரப்பட்டு வருகிறது.