வாழ்க்கையின் மிக முக்கியமான நாளில் தேவதையாக ஜொலிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு, அந்த மேடையிலேயே நேர்ந்த அவமானம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், அழகாகத் தயாராகி மேடையில் நிற்கும் மணப்பெண் மீது, அங்கிருப்பவர்கள் விளையாட்டு என்ற பெயரில் ‘ஸ்ப்ரே ஃபோம்’ (White Foam) அடித்து ஊற்றுகின்றனர்.

சில நொடிகளிலேயே அந்தப் பெண்ணின் மேக்கப், ஹேர்ஸ்டைல் மற்றும் விலை உயர்ந்த திருமண உடை என அனைத்தும் பாழாகி, அந்தப் பெண்ணே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போகிறார். ​ஆரம்பத்தில் சிரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், ஃபோம் முகம் முழுவதும் பரவியதும் மூச்சு விட முடியாமல் திணறி, தனது முகத்தை மூடிக்கொண்டு தர்மசங்கடத்திற்கு உள்ளாவதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

“கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு பெண்ணை இப்படி அசிங்கப்படுத்துவதா?” என நெட்டிசன்கள் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “மகிழ்ச்சி என்பது மற்றவர்களைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்” எனப் பலரும் அந்த மணப்பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.