மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே நேரத்தில் மூன்று விதமான நவீன உடற்பயிற்சி கருவிகளை (Fitness Wearables) அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஹூப் (Whoop) பேண்ட் மற்றும் ஊரா (Oura) ரிங் என சுமார் லட்சக்கணக்கிலான மதிப்புள்ள இந்த கருவிகளை அவர் ஏன் அணிந்திருக்கிறார் என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

இது குறித்து பிட்னஸ் நிபுணர்கள் கூறுகையில், இது வெறும் ஆடம்பரத்திற்காக அல்ல; இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தின் தரம் போன்ற உடல்நலத் தகவல்களை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கவே அவர் இவ்வாறு செய்கிறார் என்று விளக்கியுள்ளனர். ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு தனித்துவமான வேலையைச் செய்கின்றன. ஊரா ரிங் தூக்கத்தைப் பற்றியும், ஹூப் பேண்ட் உடல் எவ்வளவு சோர்வாக இருக்கிறது என்பதையும், ஆப்பிள் வாட்ச் தினசரி செயல்பாடுகளையும் துல்லியமாகக் கணக்கிடுகிறதாம்.

அரசியலில் ஓயாது உழைக்கும் மம்தா, தனது உடல்நிலையை இவ்வளவு நுணுக்கமாகக் கவனிப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. “தலைவர்னா இப்படித்தான் உடம்பை ஃபிட்டா பாத்துக்கணும்” என ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், ஒரு சாதாரண மனிதருக்கு இவ்வளவு கருவிகள் தேவையில்லை, அடிப்படை உடற்பயிற்சியே போதும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.