விஜய் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் கலக்கி வரும் சீரியல் ‘அய்யனார் துணை’. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், ஐந்து அண்ணன் தம்பிகளின் கதையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. இதில் நடிகை மதுமிதாவின் கணவரான ‘சோழன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் செய்ஜூ நடித்து வருகிறார்.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த சீரியலில் நடிப்பதற்காக, நடிகர் அரவிந்துக்கு ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீரியல் மட்டுமின்றி, தற்போது விஜய் டிவியின் புகழ்பெற்ற ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 நிகழ்ச்சியிலும் அரவிந்த் தனது மனைவியுடன் இணைந்து போட்டியாளராகப் பங்கேற்று வருகிறார். இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தம்பதிக்கு ஒரு நாளைக்குச் சுமார் 50,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வாரத்தின் டாப் 5 சீரியல்களில் எப்போதுமே முன்னிலை வகிக்கும் ‘அய்யனார் துணை’, திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.