திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு விதவிதமான பரிசுகளை வழங்கினர். அப்போது ஒரு தொண்டர், நடிகர் அஜித்துடன் விஜய் இணைந்து இருக்கும் அழகான புகைப்பட பிரேம் ஒன்றைப் பரிசாக நீட்டினார்.
தம்பி நண்பர் போட்டோவ கொடுப்பா! தொண்டர் கொடுத்த அஜித் புகைப்படத்தை கேட்டு வாங்கிய விஜய்..!#Tirupattur #TVK #Vijay #Campaign #VijayCampaign #2026Election #NewsTamil24x7 pic.twitter.com/jX3FibtKR3
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 10, 2026
அதனை உடனடியாகக் கவனித்த விஜய், அந்தப் புகைப் படத்தை ஆசையோடு வாங்கி, “நண்பர் அஜித்துடன் நான் இருக்கும் புகைப்படம்” என்று அங்கிருந்த அனைவருக்கும் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரசியலுக்கு வந்த பிறகும் தனது திரையுலக நண்பர் மீதான அன்பை விஜய் வெளிப்படுத்திய இந்த வீடியோ, தற்போது எக்ஸ் (X) தளத்தில் ‘தல – தளபதி’ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
