சென்னையைச் சேர்ந்த ரெபெக்ஸ் குரூப் (Refex Group) நிறுவனம், தனது நீண்டகால ஊழியர்களின் விசுவாசத்தைக் கௌரவிக்கும் வகையில் செய்துள்ள ஒரு செயல் தற்போது ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் வியக்க வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் ‘Wheel of Achievement’ என்ற திட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நிறுவனத்திற்காக உழைத்த 12 ஊழியர்களுக்கு தலா ஒரு புத்தம் புதிய ‘ஆடி ஏ4’ (Audi A4) சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ளார் அந்த நிறுவனத்தின் பாஸ்.
இந்த ஒரு காரின் ஆன்-ரோடு விலை சுமார் 46 லட்சம் முதல் 55 லட்சம் ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. வெறும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இந்தப் பரிசை வழங்காமல், நிறுவனத்தின் இக்கட்டான காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த சாதாரண பணியாளர்களுக்கும் இந்த சொகுசு கார் வழங்கப்பட்டுள்ளதுதான் இதில் மிகப்பெரிய ஹைலைட்.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா என சகல வசதிகளும் கொண்ட 12 சொகுசு கார்கள் வரிசையாக நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “பாஸ்-னா இப்படி ஒரு பாஸ் அமையணும்” என நெட்டிசன்கள் ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
