டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் இப்போது வெறும் பயணத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், விதவிதமான சர்ச்சைகளுக்கும் பெயர்போன இடமாக மாறி வருகின்றன. சமீபத்தில் டெல்லி மெட்ரோ நடைமேடையில் இளம் தம்பதியிடையே ஏற்பட்ட மிகத்தீவிரமான மோதல் குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மெட்ரோ ரயில் தவறிப்போனதால் தொடங்கிய அந்த வாக்குவாதம், ஒருகட்டத்தில் அவர்களது தனிப்பட்ட குடும்ப நிதிச் சிக்கல் வரை சென்று பொதுமக்களையே அதிரவைத்துள்ளது.

​அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது கணவரை நோக்கி ஆவேசமாகக் கத்துகிறார். “வீட்டை நான் தான் நடத்துகிறேன், குழந்தைகளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். மாதம் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நான் தான் சம்பாதிக்கிறேன்.. நீ என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அவர் பகிரங்கமாகக் கேட்கும் கேள்விகள் அங்கிருந்த மற்ற பயணிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இன்றைய அவசர உலகில் வேலைப்பளுவும் குடும்பச் சுமையும் பெண்களை எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பதற்கு இதுவே சாட்சி” என கமெண்ட் செய்து வருகின்றனர்.