சமூக வலைத்தளங்களில் ‘லைக்ஸ்’ வாங்குவதற்காக இளைஞர்கள் எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து போகிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு வாலிபர் அதிவேகமாக வரும் ரயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறார். சில நொடிகளில் ரயில் அவர் மீது ஏறிச் செல்கிறது. ரயில் முழுவதுமாக கடந்த பிறகு, அந்த வாலிபர் கையில் மொபைல் போனுடன் சிரித்துக்கொண்டே எழுந்து வருவது பார்ப்பவர்களைக் கோபமடையச் செய்துள்ளது.

​இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “ஒரு சின்ன தவறு நடந்திருந்தாலும் உயிர் போயிருக்குமே, இதெல்லாம் ஒரு சாதனையா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கோபமடைந்த நெட்டிசன்கள் சிலர், “சொந்த உயிரையே மதிக்காத இவர்களை இஸ்ரேல் போன்ற போர் நடக்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புகழுக்காக இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. எது எப்படியோ, சில நொடிகள் விளம்பரத்திற்காக உயிரோடு விளையாடும் இந்த கலாச்சாரம் மிகப்பெரிய ஆபத்து என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.