கோவை புதூர் ரிங் ரோட்டில் இன்று மதியம் ஒரு ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு ஒன்று மின்னல் வேகத்தில் பைக்கின் முன்பகுதி வழியாக ஏறியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், வண்டியை அப்படியே போட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினார். அதன் பின்னரும் அந்தப் பாம்பு வண்டியை விட்டு இறங்காமல், சீறிக்கொண்டு படம் எடுத்தாடிய காட்சி பார்ப்பவர்களை நடுங்க வைத்துள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் திகில் காட்சியைத் தங்கள் செல்போனில் படம்பிடிக்க, தற்போது அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “நல்லவேளை.. ஒரு செகண்ட் மிஸ் ஆகியிருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்” என அந்த வாலிபரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.