மதுரை சோழவந்தான் திமுக தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இவருக்கு ஆதரவாக திமுகவின் அவை தலைவர் பாலசுப்பிரமணியன் பிரச்சார வாகனத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்று தன்னைத்தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த ஒருவரை ஆத்திரத்திலும் மைக்கால் அடிக்க கை ஓங்கினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னதாக திமுக கூட்டணியில் விசிக கட்சி இருக்கும் நிலையில் திருமாவளவன் பிரச்சார வாகனத்தில் மதுபோதையில் ஏறி தொண்டர் ஒருவர் தொடர் பெயர்களை செய்ததால் ஆத்திரத்தில் அவரது கன்னத்தில் பளார் விட்டது குறிப்பிடத்தக்கதாகும்
ரொம்ப கோபக்காரரா இருப்பாரோ….
தொண்டரையும் பெண்களையும் அடிக்க கை ஓங்கிய தி.மு.க நிர்வாகி.. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்தவரால் சலசலப்பு..!#Madurai | #Sholavandan | #DMKCandidate | #Election2026 | #ElectionCampaign | #PolimerNews pic.twitter.com/zipLFbX4K1
— Polimer News (@polimernews) April 9, 2026
