மும்பை இந்தியன்ஸ் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தங்களது அணிக்கு மாற்ற முயற்சிப்பதாக வெளியாகி வரும் தகவல் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வெறும் 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை 1.10 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஏலம் எடுக்கப்பட்ட மிக இளைய வீரர் என்ற சாதனையை அவர் படைத்த நிலையில், தற்போது அவரை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி தட்டித்தூக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த இடமாற்றம் நிகழ்ந்தால், இது ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ‘சுவிட்ச்’ ஆகக் கருதப்படும். பொதுவாக ஒரு அணி ஏலம் எடுத்த வீரரை அதே சீசனில் மற்றொரு அணிக்கு மாற்றுவது அரிதான ஒன்று என்றாலும், மும்பை இந்தியன்ஸ் தனது எதிர்காலத் திட்டத்திற்காக இந்த இளம் அதிரடி வீரரை குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.