மக்களைப் பணத்தால் விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நெல்லைத் தேர்தல் பிரசார மேடையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து இந்த முறை ஒன்னும் கிழிக்க முடியாது; மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டார்கள்” என்று அவர் ஆவேசமாக முழங்கினார். பணத்தை நம்பி அரசியல் செய்யும் கட்சிகளின் வியூகங்கள் தவெக-வின் எழுச்சியால் தவிடுபொடியாகும் என அவர் சூளுரைத்தார்.
தனக்கு எதிராக ஏவப்பட்ட அத்தனை வலிகளையும், சோதனைகளையும் தாங்கிக்கொண்டு மக்களுக்காகவே தான் அரசியலுக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பண பலத்தால் இந்த மாபெரும் மக்கள் சக்தியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனச் சவால் விடுத்தார். விஜய்யின் இந்தத் துணிச்சலான பேச்சு, பணநாயகத்திற்கு எதிராகப் போராடும் சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
