திமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளை நெல்லை பொதுமேடையில் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுப் போட்டுடைத்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “ஒரு பக்கம் இயற்கை வளங்களைச் சுரண்டி மலைகளை விழுங்குகிறார்கள், மணல் மாஃபியாக்கள் ஒரு பக்கம் ஆட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள், மற்றொரு பக்கம் குடும்பமாகச் சேர்ந்து கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

​டாஸ்மாக் ஊழல் தொடங்கி நகராட்சித் துறை ஊழல் வரை இந்த ஆட்சி முழுவதும் ஊழலில் ஊறிப்போய், நாறிப்போய் கிடப்பதாகச் சாடினார். “இவ்வளவு முறைகேடுகளைச் செய்துவிட்டு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்கப் போகிறீர்கள் சார்?” என முதலமைச்சரை நோக்கி அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.