நொய்டாவைச் சேர்ந்த சுனில் திவேதி என்பவர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு புலந்த்சாகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி இரண்டு மாதங்களாகத் தன்னைச் சீரழித்ததாகவும், வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஒரு அதிரடித் திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

​வழக்கின் விசாரணையின் போது, அந்தப் பெண் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சுனிலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தனக்குத் தெரியும் என்றும், இருவருக்கும் இடையிலான உறவு தனது முழு சம்மதத்துடனேயே (Consensual) நடந்தது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சுனிலை பழிவாங்கத் திட்டமிட்டு இந்த வழக்கு போடப்பட்டதாக சுனில் தரப்பில் வாதிடப்பட்டது. 12 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் சுனிலை நிரபராதி என அறிவித்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.