ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கழுதை இறைச்சி என்று கூறி குதிரை இறைச்சியை விற்பனை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கழுதை இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஒரு கழுதையின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், குதிரைகள் குறைந்த விலைக்கு கிடைப்பதாலும், ஒரு குதிரையில் இருந்து 60 முதல் 70 கிலோ வரை அதிக இறைச்சி கிடைப்பதாலும், இந்த கும்பல் மக்களை ஏமாற்றி குதிரை இறைச்சியை விற்று வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 குதிரைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பந்தயத்திற்கு தகுதியற்ற கலப்பினக் குதிரைகளை குறைந்த விலைக்கு வாங்கி, ஒரு கிலோ 600 முதல் 700 ரூபாய் வரை லாபத்திற்காக இவர்கள் விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கழுதைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கைதானவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.