கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான அஞ்சனாவும், அர்ச்சனாவும் பிறந்தது முதல் ஒன்றாகவே வளர்ந்து, தற்போது அரசு வேலையிலும் ஒன்றாக சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். அஞ்சனா அறிவியல் துறையிலும், அர்ச்சனா பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றவர்கள்.
இருவரும் அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு, கேரள பொதுப்பணி ஆணையத் தேர்வுக்கு மிகவும் கடினமாக உழைத்து ஒன்றாகவே தயார் செய்து வந்தனர்.
சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் இருவருமே தேர்ச்சி பெற்று, தற்போது பணி ஆணையையும் பெற்றுள்ளனர்.
இதன்படி, அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகவும், அரசு கிடங்கில் உதவி விற்பனையாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
லட்சியத்தை அடைய துடித்த இந்த இரட்டை சகோதரிகளின் வெற்றியை அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
