தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று, தான் முதல் ஆளாக வாக்களித்துவிட்டு, அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பாஜக-வின் ‘பூத் ஏஜென்ட்’ (Booth Agent) ஆகப் பணியாற்றுவேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஒரு மாநிலத் தலைவரே பூத் ஏஜென்டாகப் பணியாற்ற முன்வந்திருப்பது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், இது அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதற்கான மறைமுக சமிக்ஞை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வேட்பாளராகக் களம் காணாமல், கட்சிப் பணிகளிலும் தேர்தல் மேலாண்மையிலும் முழுமையாகக் கவனம் செலுத்த அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
