தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குட்டி மாணவர்களுக்கும் முழு ஆண்டுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்தத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் தயார் செய்ய தமிழக அரசுப் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த கையோடு மாணவர்களுக்கு ஜாலியான கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், குட்டிப் பசங்க உற்சாகத்துடன் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். கல்வித்துறையின் இந்த முறையான திட்டமிடல், மாணவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
