திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 2) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அங்கு பணியில் இருந்த சதீஷ் என்ற காவலரின் வலது கால் மீது ஆதவ் அர்ஜுனாவின் காரின் முன்சக்கரம் ஏறியதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
விபத்து நடந்தவுடன் தவெக தொண்டர்கள் சதீஷை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த ஆதவ் அர்ஜுனா, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் காவலர் சதீஷைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
தன்னுடைய கார் ஏறி கால் முறிந்த காவலர்.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ஆதவ் அர்ஜுனா!#AadhavArjuna | #TVK | #Trichy | #Police pic.twitter.com/NBDMeaLT58
— PttvOnlinenews (@PttvNewsX) April 2, 2026
“>
அவருக்குத் தேவையான உயர் சிகிச்சை மற்றும் உதவிகளைச் செய்வதாக உறுதியளித்த ஆதவ் அர்ஜுனா, இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
