மக்கள் எப்போதுமே ஏதாவது வேடிக்கையான நிகழ்வு நடந்தால் உடனே அங்கு கூடிவிடுவது வழக்கம். ஜேசிபி பள்ளம் தோண்டுவதைக் கூட மணிக்கணக்கில் வேடிக்கை பார்க்கும் மக்கள் இப்போது எலி சண்டையையும் விட்டுவைக்கவில்லை.
இன்ஸ்டாகிராமில் @hyes_umit என்ற கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், சாலையோரம் இரு எலிகள் ஆக்ரோஷமாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்கின்றன.
இந்தச் சண்டையைப் பார்க்க அந்தச் சாலையில் சென்றவர்கள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
View this post on Instagram
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எலிகளின் இந்த ‘குத்துச்சண்டை’ போட்டியை மக்கள் கைதட்டியும், சிரித்துக் கொண்டும் உற்சாகமாக ரசித்தனர்.
சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள், “இது எலிகளுக்கு இடையேயான டபிள்யூ.டபிள்யூ.இ (WWE) போட்டி” என ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
