பெங்களூரு நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி அளிக்கும் விசித்திரமான பாலியல் மற்றும் மன ரீதியான தொல்லைகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரருக்கும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தொடக்கத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில் அந்தப் பெண்ணிற்கு இருந்த மதுப்பழக்கம் காரணமாக விரிசல் ஏற்படத் தொடங்கியது. தினமும் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மது அருந்திவிட்டுத் தாமதமாக வீடு திரும்புவதை அந்தப் பெண் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தனது மனைவியின் இந்தப் போக்கைக் கண்டித்த கணவரிடம் மது அருந்துவது மற்றும் நண்பர்களுடன் வெளியில் செல்வது சாதாரணமான ஒன்று என அந்தப் பெண் வாதிட்டுள்ளார். அத்துடன் தனது கடந்த கால ரகசிய உறவுகள் மற்றும் உல்லாச வாழ்க்கை குறித்தும் கணவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் சமரசம் செய்து வைத்த போதிலும் சில மாதங்களிலேயே அந்தப் பெண் மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அந்தப் பெண் தனது கணவருக்கு ஆபாச வீடியோக்களைக் காண்பித்துத் தனது தோழிகளுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த கணவரை அந்தப் பெண் பாலியல் மற்றும் மன ரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மனைவியின் இத்தகைய விசித்திரமான மற்றும் கொடூரமான தொல்லைகளைத் தாங்க முடியாத கணவர் அவரிடமிருந்து பிரிந்து வாழ முடிவு செய்தார். இதற்காகத் தான் வாங்கிக் கொடுத்த நகைகளைத் திரும்பக் கேட்டபோது அந்தப் பெண் கொடுக்க மறுத்ததாகத் தெரிகிறது.

நீதி வேண்டி அந்த வாலிபர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கமாக ஆண்கள் மது அருந்திவிட்டுப் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பொறியாளர் தனது கணவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை அதிகாரிகளுக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்தப் பெண்ணை நேரில் அழைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசித்திரமான குடும்பத் தகராறு பெங்களூரு வட்டாரத்தில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.