இன்றைய நவீன உலகில் சிக்ஸ்பேக் வைப்பதும், ஜிம்முக்கு போவதும் மட்டும் ஆரோக்கியம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நாம் அன்றாடம் செய்யும் மிகச்சிறிய தவறுகள் நம்மை அறியாமலேயே நம் வயதை வேகமாகக் கூட்டி விடுகின்றன. குறிப்பாக, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, புகைப்பிடிப்பதற்கு சமமான ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இது நம் உடலின் மெட்டபாலிசத்தை குறைப்பதுடன், டிஎன்ஏ அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தி, நம்மை சீக்கிரமே முதியவர் தோற்றத்திற்கு தள்ளிவிடுகிறது. தினமும் 60 முதல் 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து நம்மைக் காக்கும். ​அதேபோல், போதிய தூக்கம் இல்லாதது மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் நம் உடலின் செல்களைச் சிதைக்கின்றன.

வெறும் 5 மணி நேரத் தூக்கம் போதும் என்று நினைப்பது உங்கள் உடலுக்கு நீங்களே வைக்கும் வேட்டு! இது சருமத்தைச் சுருங்கச் செய்வதுடன், நினைவாற்றலையும் மங்கச் செய்யும். மேலும், அதிகப்படியான சர்க்கரை, மொபைல் போன் தரும் ‘ப்ளூ லைட்’ மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிக்காதது போன்ற பழக்கங்கள் உங்கள் இளமையைத் திருடி வருகின்றன.

நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ விரும்பினால், இந்தச் சின்னச் சின்னப் பழக்கங்களை இன்றே மாற்றி, சமூக உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள்.