பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் பந்தைச் சேதப்படுத்தியதாக (Ball Tampering) எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் போது, நடுவர்கள் பந்தை ஆய்வு செய்து அது மாற்றப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
விதிகளின்படி, பேட்டிங் செய்த கராச்சி அணிக்கு 5 கூடுதல் ரன்கள் வழங்கப்பட்டன. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில், அது 9 ரன்களாகக் குறைந்ததால் கராச்சி அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த விதிமீறல் தொடர்பாக ஃபகார் ஜமானுக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. போட்டி நடுவர் ரோஷன் மகாநாமா இது குறித்து அடுத்த இரண்டு நாட்களில் விசாரணை நடத்த உள்ளார்.
அதே போட்டியில், விக்கெட் வீழ்த்திய பிறகு ஆக்ரோஷமாகக் கொண்டாடிய கராச்சி அணி வீரர் ஹசன் அலிக்கு, நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
