தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில், இன்று ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட உள்ளது. 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தந்தை மற்றும் மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

​இந்த 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி முத்துக்குமரன் இன்று மதியம் அறிவிக்கவுள்ளார். சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தண்டனை அமையவுள்ள நிலையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனையா அல்லது அதற்கு மேலான தண்டனையா என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.