காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் அவரிடம் அதிரடியான கேள்வி ஒன்றை எழுப்பினார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்கிறீர்களே, அது எப்படிச் சாத்தியம்?” என்று அவர் கேட்டதால் அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
திடீரென கேள்வி கேட்ட நபர்! பேச்சை நிறுத்திய சீமான்! நாதக கூட்டத்தில் பரபரப்பு | NTK #seeman #naamtamilar #seemanspeech #ntk #abpnadu pic.twitter.com/T3CXheuu8D
— ABP Nadu (@abpnadu) March 30, 2026
உடனே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அந்த இளைஞரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களைத் தடுத்த சீமான், “அவரைப் பேச விடுங்கள்.. கேள்வி கேட்கச் சொன்னால் யாராவது ஒருவராவது கேட்கிறாரே” என்று பாராட்டியதோடு, இதே கேள்வியை ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடமும் கேட்க வேண்டும் என்றார். மேலும், தங்களது ஆட்சியில் நிச்சயம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
