தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தனது அதிரடி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார். பெரம்பூரில் இருந்து தொடங்கும் இந்த பிரசாரம், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக நடைபெற உள்ளது. இதற்காக தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தாலும், கட்சியினருக்கு மிக முக்கியமான சில கட்டுப்பாடுகளை விஜய் விதித்துள்ளார்.

​குறிப்பாக, பிரசாரத்தின் போது தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து யாரும் வர வேண்டாம் என்றும், கூட்ட நெரிசலில் சிக்க நேரிடும் என்பதால் கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரசாரத்தில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.