ஒரு பள்ளி மாணவர் தனது பள்ளி உடுப்பில் அணிந்தபடி, வீட்டில் எளிய பொருட்களைக் கொண்டு தயாரித்த உடை மடக்கும் இயந்திரம் என்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த DIY கருவி, உடைகளை சில வினாடிகளில் சரியாக மடித்து அழகாக வைக்க உதவுகிறது.

இந்த இயந்திரம் தட்டையான பலகைகள், இணைப்புகள் (hinges) மற்றும் லீவர் அடிப்படையிலான எளிய வழிமுறையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்று பேனல்கள் உள்ளன – இடது, வலது மற்றும் கீழ் பகுதி. ஒரு சட்டையை பலகையின் மீது நேராக விரித்து வைத்தால், பக்கவாட்டு பேனல்கள் உள்ளே மடங்கி சட்டையின் பக்கங்கள் மற்றும் கைகளை மடிக்கின்றன. பின்னர் கீழ் பேனல் செயல்பட்டு, உடையை சிறிய செவ்வக வடிவில் அழகாக மடித்து முடிக்கிறது. கையால் மடிப்பதை விட இது மிக வேகமாகவும், சிரமமின்றியும் செயல்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sarcastic_Doctorrr (@sarcastic_doctorrr)

இந்த எளிய கண்டுபிடிப்பு இணைய பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “பெரிய ஆய்வகங்களோ அல்லது பெரும் நிறுவனங்களோ தேவையில்லை; வகுப்பறையில் இருந்தே எளிய யோசனையுடன் பயனுள்ள தீர்வுகளை உருவாக்க முடியும்” என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர். மாணவரின் படைப்பாற்றல் மற்றும் நடைமுறை சிந்தனைக்கு பலரும் புகழ் அளித்து வருகின்றனர்.

இந்த வீடியோ பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. சாதாரண மாணவர்களும் தங்கள் யோசனைகளை செயல்படுத்தினால், அன்றாட பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் கிடைக்கும் என்பதை இது நிரூபிக்கிறது.