தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வுக்கும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலும், தொகுதிகளின் விவரங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில், 18 தொகுதிகளில் அக்கட்சி அதிமுக வேட்பாளர்களை நேரடியாக எதிர்கொள்கிறது.
திமுக – அதிமுக இடையே பிரதான போட்டி நிலவினாலும், காங்கிரஸ் போட்டியிடும் இந்த 18 தொகுதிகள் நட்சத்திரத் தொகுதிகளாக மாறியுள்ளன.
மீதமுள்ள 10 தொகுதிகளில் பாஜக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் காங்கிரஸ் மோதக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 தேர்தலை விட இம்முறை தொகுதிகள் மற்றும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மிகுந்த கவனமுடன் செயல்பட்டுள்ளது. அதேவேளையில், தனது செல்வாக்குள்ள தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுகவும் தீவிர முனைப்பு காட்டி வருவதால், இந்த 18 தொகுதிகளின் முடிவு மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது
