தெலுங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் (Zilla Parishad High School), பாடம் சொல்லித் தர வேண்டிய ஆசிரியரே மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூரு மண்டலத்தில் உள்ள அந்தப் பள்ளியில், கடந்த 7-ம் தேதி கணினி ஆய்வகத்திற்கு (Computer Lab) வந்த 10-ம் வகுப்பு மாணவியிடம், சுவாமி என்ற ஆசிரியர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.

இந்த முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளூர் கல்வி அதிகாரிகள் முயன்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு மாணவியின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மற்றொரு வழக்கில் பள்ளி மாணவியைச் சீரழித்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சூழலில், கம்ப்யூட்டர் லேப்பில் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.