தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த டி. செல்வம், நேற்று (மார்ச் 25) கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.
தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினருடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்ததாகவும், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்தச் சூழலில், தவெகவில் இணையும் டி. செல்வத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் விலகி விஜய்யுடன் இணைவது, குறிப்பாகத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
