ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு பிரம்மாண்ட சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சுமார் 16,700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி இவ்வளவு பெரிய தொகைக்கு கைமாறியிருப்பது இதுவே முதல் முறையாகும். ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும், ஆர்சிபி அணிக்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளமும், அந்த அணியின் பிராண்ட் மதிப்பும் தான் இந்த மெகா விலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த அதிரடி விற்பனை மூலம், மற்ற பெரிய அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் மதிப்பையும் ஆர்சிபி முந்தியுள்ளது.
இந்த மெகா டீல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானதை அடுத்து, சமூக வலைதளங்களில் “ஈ சாலா கப் நம்தே” என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
