தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அந்த 5-வது டி20 போட்டி, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்தது. இதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் நியூசிலாந்து வீரர் நிக் கெல்லி செய்த ஒரு மாயாஜாலத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்க வீரர் ரூபன் ஹெர்மன் அடித்த பந்து, மைதானத்தில் யாரும் இல்லாத இடைவெளியில் விழப்போகிறது என்று அனைவரும் நினைத்தபோது, எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் ஓடி வந்த 32 வயது நிக் கெல்லி, அந்தரத்தில் பறந்து ஒரே கையில் அந்தப் பந்தைப் பிடித்த விதம் மைதானத்தையே அதிர வைத்தது.
இந்த ‘மிராக்கிள்’ கேட்ச் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தாலும், நியூசிலாந்து அணிக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய தென்னாப்பிரிக்கா 187 ரன்களைக் குவித்தது.
Exhibit ∞ of Kiwis pulling off the incredible things on the field 🤯
Nick Kelly, you beauty 🙇 #SonySportsNetwork #NZvSA pic.twitter.com/Lrmxe86abR
— Sony Sports Network (@SonySportsNetwk) March 25, 2026
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு, நிக் கெல்லி தனது பேட்டிங் மூலமும் அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த இந்தத் தொடரின் கிளைமாக்ஸ் ஆட்டத்தில், அந்த ஒரு கேட்ச் மட்டும் வரலாற்றுச் சாதனையாக எஞ்சி நின்றது.
