ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், திடீர் திருப்பமாக 5 நாள் போர்நிறுத்தத்தை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கக் கோரி விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மின் நிலையங்களைத் தாக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. தற்போது ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி அமெரிக்கா தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்காவுடன் தாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஈரானின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி, அமெரிக்கா ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடாது என்பதற்குச் சர்வதேச உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், எங்கள் உள்கட்டமைப்பைத் தாக்கினால் அமெரிக்கா முடங்கும் வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
