ஹரியானாவில் நடுரோட்டில் ஒரு காதல் விவகாரம் கைகலப்பில் முடிந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ‘கர் கே கலேஷ்’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண் அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, அருகில் இருந்த டீபாட் (Teapot) ஒன்றை எடுத்து அந்த இளைஞர் மீது ஆவேசமாக வீசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவர், அங்கிருந்த வைப்பரை (Viper) எடுத்து அந்தப் பெண்ணைத் திருப்பித் தாக்க முயன்றனர்.

சிறிது நேரம் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்த நிலையில், அங்கிருந்த மற்ற இளைஞர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். “இது காதலா அல்லது போரா?” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து கிண்டலடித்து வருகின்றனர். இந்த ‘டிராமா’ வீடியோ ஏற்கனவே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.