இலங்கை மற்றும் ஈரான் இடையிலான உறவு சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரபிக்கடலில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கடற்படைக் கப்பலான 32 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டதோடு, உயிரிழந்த 84 வீரர்களின் உடல்களையும் மீட்க உதவியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும், மனிதாபிமான அடிப்படையில் ஈரானிய வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வரும் இலங்கையின் இந்தச் செயல், அந்நாட்டை ஈரானியர்களின் ‘ரட்சகனாக’ பாதுகாப்பாளர் மாற்றியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவும் இந்தச் சூழலை புது தில்லி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கொழும்பு சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக அமெரிக்கா அதிருப்தியில் உள்ள நிலையில், கார்செட்டியின் இந்தப் பயணம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அவர் இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஈரானின் செல்வாக்கையும், இலங்கையின் நடுநிலை நிலைப்பாட்டையும் சமன்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிகிறது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்களின் பின்னணியில், இந்த ராஜதந்திர நகர்வுகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும்.
