19-வது ஐ.பி.எல். தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வரும் 30-ஆம் தேதி சந்திக்கிறது. இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரசிகர்களை உற்சாகப்படுத்த ‘ரோர் 26’ என்ற பிரம்மாண்ட விழா நேற்று நடைபெற்றது.
இதில் சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்றதுடன், ஏ.ஆர். ரகுமானின் இசைக்கச்சேரியும் ரசிகர்களைக் கோலாகலப்படுத்தியதுஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சி.எஸ்.கே. வீரர் சஞ்சு சாம்சனுடன் ஜாலியாகக் கலந்துரையாடினார்.
<a href=”http://
A CSK fan at heart, Our star SK in the house 🥳#Roar26 #WhistlePodu pic.twitter.com/Sl8aG0xmGH
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2026
“>
அப்போது, “கேரளாவிலிருந்து வரும் படங்கள் மற்றும் ஹீரோயின்கள் இங்கே சூப்பர் ஹிட் ஆவது போல, கேரளாவிலிருந்து வந்த கிரிக்கெட் வீரரான நீங்களும் பிளாக்பஸ்டர் ஆகிவிட்டீர்கள், அடிபொலி!” என மலையாளத்தில் பேசி அசத்தினார்.
சிவகார்த்திகேயனின் இந்த நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு தோனி உள்ளிட்ட மற்ற வீரர்கள் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
