மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆர்.ஜி.பி.வி  பல்கலைக்கழக விடுதி உணவில் பல்லி கிடந்ததாக மாணவர் ஒருவர் புகார் அளித்த நிலையில், அங்கு நடந்த வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உணவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் மெஸ் ஊழியர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் அது பல்லி அல்ல ‘குடைமிளகாய்’  என்று கூறி மறுத்துள்ளனர்.

தனது வாதத்தை நிரூபிக்க அந்த ஊழியர் அந்தப் பல்லியை எடுத்து அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது உண்மையாகவே பல்லியா அல்லது குடைமிளகாயா என்ற விவாதம் இணையவாசிகளிடையே எழுந்துள்ளது.