மலையாளத் திரையுலகின் பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர் என அறிமுகமான வாலிபர் ஒருவர் தொடர்ந்து குறுந்தகவல்கள் மற்றும் செல்போன் அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கொச்சி அருகே உள்ள ஒரு கடைக்கு அந்த நடிகை டாட்டூ குத்தச் சென்றபோது, அங்கு வந்த அந்த வாலிபர் நடிகையை டாட்டூ குத்த வேண்டாம் என மிரட்டியதோடு, அவரிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை அளித்த புகாரின் பேரில், பாலரிவட்டம் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் கத்ரிக்கடவு பகுதியைச் சேர்ந்த விபின் ராய் என்பதும், எம்.பி.ஏ பட்டதாரியான இவர் காக்கநாட்டில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.