தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் மட்டுமே திரையுலகில் இருந்து வந்து முதலமைச்சராகி நீண்ட காலம் ஆட்சியைத் தக்கவைத்த சாதனையாளர் ஆவார். அவருக்குப் பிறகு சிவாஜி கணேசன் போன்ற பெரும் நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

ஜெயலலிதா அரசியலுக்கு வந்தாலும், அவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற பலமான இயக்கத்தின் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தார். இவர்களுக்குப் பின் விஜயகாந்த் மட்டுமே சொந்தமாக கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்து அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மூத்த நடிகர் சிவகுமார், எம்.ஜி.ஆரின் தனித்துவமான அரசியல் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.
<a href=”http://

“>

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கு முன்பே ஒரு நடிகர் நாட்டை ஆள முடியும் என்பதை எம்.ஜி.ஆர் நிரூபித்துக் காட்டினார் என்று அவர் குறிப்பிட்டார். அதே சமயம், நடிப்பில் சிகரம் தொட்ட சிவாஜி கணேசனே அரசியலில் தோற்றுப்போனதைச் சுட்டிக்காட்டிய அவர், “எல்லாவற்றையும் பெற்றவர் எவரும் இல்லை, கடவுள் கொடுப்பதை வைத்து திருப்தியாக வாழ வேண்டும்” என்ற கருத்தையும் முன்வைத்தார்.

மேலும், காமராஜர் காலத்திலேயே தமக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்ததாகவும் அவர் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.தற்போது தமிழக அரசியலில் நடிகர் விஜய் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவர், வரவிருக்கும் தேர்தலில் எம்.ஜி.ஆரைப் போலப் பெரிய வெற்றியைப் பெறுவாரா அல்லது மற்ற நடிகர்களைப் போலச் சறுக்கலைச் சந்திப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இதற்கான உண்மையான விடை வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரிந்துவிடும்.