இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த பிறகு, தற்போது 2026 ஐபிஎல் தொடருக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். கடந்த மார்ச் 5-ம் தேதி சானியா சந்தோக்கை திருமணம் செய்த அர்ஜுன், திருமணமான அடுத்த நாளே கிரிக்கெட் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதைக் கண்டு வியந்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த், அர்ஜுனின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, அவரோடு இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.பயிற்சியின் போது அர்ஜுன் பயன்படுத்தும் மட்டையின் எடை குறித்துக் கேட்ட ரிஷப் பந்த் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
<a href="http://
Looks like Sachin sir gave last chanse to Arjun Tendulkar ⚠️
Rishabh – tera bat ka kitna weight h ? , Yuvi paaji ke sath full time practice, Saadi ke din bhi
Arjun – 1220 kg , Papa to 1320-30 ki bolte h , kam weight se jata nhi h shot !! 🤯
— Kiara (@crickiara) March 18, 2026
“>
தனது தந்தை சச்சினைப் போலவே கனமான மட்டையைப் பயன்படுத்த விரும்பும் அர்ஜுன், தனது பேட் 1.25 கிலோ எடை கொண்டது என்று கூறியுள்ளார். கனமான பேட் மூலம் பந்தை அடிக்கும்போது அது மிகவேகமாக எல்லையைத் தாண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளில் மும்பை அணிக்காக வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அர்ஜுனுக்கு, ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராகத் தொடங்கும் இந்த சீசன் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
