ஈரான் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதன் விளைவாகப் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு, அங்கு வசிக்கும் வெளிநாட்டு மக்களின் பாதுகாப்பும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் புதிய வரி விதிக்க ஈரான் அரசு ஆலோசித்து வருகிறது.இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்றத்தில் விரைவில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஹார்மூஸ் நீர்வழியைப் பயன்படுத்தும் சரக்கு மற்றும் எரிசக்தி கப்பல்கள் ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பாக ஈரானுக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ள நாடுகளின் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், மேற்கத்திய நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கையை எடுக்கப்போவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.