தூத்துக்குடியில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் பகுதியில் ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்.

அந்தச் சமயம், கொலை நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் காவல்துறையினரால் இவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள இந்த நபரின் பழைய குற்றப் பின்னணி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.