சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு முதியவர் பேருந்துக்குள் நுழைய கையாண்ட ‘அதிநவீன’ ஐடியா இணையவாசிகளைத் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பொதுவாகப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம்.
ஆனால், இந்த வீடியோவில் உள்ள பெரியவர், பேருந்தின் கதவு வழியாக ஏறுவதற்குப் பதிலாக, ஜன்னல் வழியாக மிக லாவகமாக உள்ளே புகுந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
View this post on Instagram
ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அவர் உள்ளே நுழைந்த வேகம் மற்றும் ஸ்டைலைப் பார்த்து அங்கிருந்த ராணுவ வீரர்களே ஒரு நிமிடம் திகைத்துப் போயுள்ளனர். ‘anandofficial_24’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பெரியவர் சும்மா தெறிக்கவிட்டுட்டாரு” என்றும், “இவரோட இந்த அசாத்தியமான திறமையை மதிக்கணும்” என்றும் நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆபத்தான காரியமாக இருந்தாலும், அந்தப் பெரியவரின் ‘ஸ்வேக்’ (Swag) இப்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
