சமீபகாலமாகத் திருமணத்திற்கு முன்பாக எடுக்கப்படும் ப்ரீ-வெடிங் போட்டோஷூட்கள் புதுமை என்ற பெயரில் வினோதமான எல்லைகளைத் தொட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி வெள்ளை நிற உடைகளை அணிந்து கொண்டு, அசுத்தமான சேறு நிறைந்த தண்ணீரில் சடலங்களைப் போல விறைப்பாகப் படுத்துக் கொண்டு போஸ் கொடுக்கின்றனர்.
Pre Wedding Shoots are getting too weird 😂😂 pic.twitter.com/xhVKjoZrVy
— Rosy (@rose_k01) March 18, 2026
இதைப் பார்க்கும் போது ஏதோ ஒரு காதல் காவியத்தின் காட்சி போலத் தெரியாமல், ஏதோ ஒரு க்ரைம் திரில்லர் படத்தில் வரும் கொலைக் காட்சி போல இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புகைப்படக் கலைஞர்கள் அந்தச் சேற்றுக்குள் இறங்கி அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பிக்கும் இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பயனர், “ப்ரீ-வெடிங் ஷூட்கள் நாளுக்கு நாள் விசித்திரமாகிக் கொண்டே போகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இதைப் பார்த்தால் திருமண ஷூட் போலத் தெரியவில்லை, ஏதோ போஸ்ட் மார்ட்டம் செய்யக் கொண்டு செல்லும் உடல் போல இருக்கிறது” என்றும், “இதைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது” என்றும் கிண்டலாகவும் அதிர்ச்சியாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
