செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார்.

மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதிப் பாதையில் தாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேடையில் முழங்கினார்.

குறிப்பாக, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அல்லது கொள்கை ரீதியாக இணக்கம் எனப் பரப்பப்படும் வதந்திகளைத் தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட விஜய், யாருக்காகவும் தன் இலக்கை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.