தமிழகம் முழுவதும் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தலைப்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பேசினார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலினை அவர் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் அவர் சர்ச்சையாக பேசியது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இது குறித்து அவர் கூறியதாவது, அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்கிறார். அப்ப நான் என் கனவை சொல்கிறேன். எனக்கு நயன்தாரா வேண்டும் கொடுப்பாரா என்று கேட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
