அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நிலவும் போர்ச் சூழலில் உலக நாடுகளுக்கு அமைதி மிகவும் அவசியம் என்றும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏற்கெனவே விடுத்த போர் நிறுத்த அழைப்பு சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

​இந்தியா தற்போது உலக அரங்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் நம்பிக்கையையும் ஒருசேரப் பெற்றுள்ள ஒரு வலிமையான நாடாகத் திகழ்கிறது. இந்தத் தனித்துவமான நிலையை பயன்படுத்தி, இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த இந்தியாவால் மட்டுமே முடியும் என்று பின்லாந்து அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்தத் தூதரக முயற்சியானது உலகளாவிய போர் அபாயத்தைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.