சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,982 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.